
கம்பர்லேண்ட் நகர் மன்றம் மற்றும் NSW காவல்துறையும், கம்பர்லேண்டைப் பாதுகாப்பான இடமாக வாழவும், பணியாற்றவும் விளையாடவும் ஏற்ற இடமாக உறுதி செய்ய முயற்சிக்கின்றன.
நாம் நடைபயிலும் போதும், பயணம் செய்யும் போதும். கம்பர்லேண்டில் சமூகத்தினருடன் பங்கேற்கும் போதும் நம் பாதுகாப்பை உறுதி செய்ய எளிமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் அறிந்து கொள்ள உதவியாக கம்பர்லேண்ட் மற்றும் ஆபர்ண் காவல்துறையின் உதவியுடன் இந்த போட்காஸ்ட்டை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.